பிரிட்டனில் கொரோனாவைப் பயன்படுத்தி பணம் ஈட்டும் நிறுவனங்களுக்கு செக்

லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை சாக்காக வைத்து மாஸ்க்குகள், கையுறைகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்கும் நிறுவங்கள், தனிநபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுமென பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார். முக்கியமாக அங்கீகரிக்கப்படாத நிறுவங்கள், ஆன்லைன் வர்த்தக்க நிறுவனங்கள் கொரோனா பாதிப்பை முன்னிட்டு தங்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்று வருகின்றன என வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.