4 பில்லியன் மாஸ்க்குள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: சீனா

பீஜிங்: பல்வேறு நாடுகளுக்கு 4 மில்லியன் மாஸ்க்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் சீனாவில் இருந்து முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்துவருகிறது

இது குறித்து சீன சுங்க அதிகாரி தெரிவித்து இருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து 3.86 பில்லியன் முகமூடிகள் 37.5 மில்லியன் பாதுகாப்பு உடைகள் 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் 2.54 மில்லியன் கோவிட் 19 சோதனை கருவிகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி 1.4 பில்லியன் டாலராக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.